| sivasiva.org |
: When Karliczek catches up and asks why she is leaving, Karolinka firmly rejects him. She tells him she no longer wants him and is heading out into the "wide world" to find a new, kinder sweetheart who will be glad to see her.
: This town is real and located in the Opole Voivodeship in Poland. It is famously home to a monument of Karolinka and Karliczek, commemorating their legendary status in Polish folklore.
: The song is a staple in the repertoire of the renowned Zespół Pieśni i Tańca Śląsk (The Silesian Song and Dance Ensemble) and has become a "theme tune" for various Polish cultural groups worldwide. Wiazanka Slaska - Karolinka
: In the song's climax, Karliczek begs her to return because "guests are coming". Karolinka refuses, stating she is already on the bridge—a symbolic point of no return—and will continue to do things her own way. Cultural Significance
The lyrics describe , a young girl from the Silesia (Śląsk) region, who sets off on a journey to the town of Gogolin . As she travels, a young man named Karliczek follows her, carrying a bottle of wine as a peace offering or a lure. The story unfolds through their dialogue: : When Karliczek catches up and asks why
: Karolinka is determined to leave and looks straight ahead, refusing to even glance back at her "fine lad" Karliczek.
: The name Karolinka is a diminutive of Karolina, which means "free man" or "strong," reflecting the character’s themes of independence and resilience. It is famously home to a monument of
Watch a traditional performance of 'Karolinka' by the Zespół Pieśni i Tańca Śląsk to see how this story is brought to life through folk dance: Zespół Pieśni i Tańca "Śląsk" - Karolinka PolskaSztuka YouTube• Jun 1, 2012
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
ஸ்ரீ அகத்திய முனிவர் அருளிய லலிதா நவரத்தின மாலை| 0-காப்பு |
| 1-வைரம் |
| 2-நீலம் |
| 3-முத்து |
| 4-பவளம் |
| 5-மாணிக்கம் |
| 6-மரகதம் |
| 7-கோமேதகம் |
| 8-பதுமராகம் |
| 9-வைடூரியம் |
| 10-பலஸ்துதி |
| 0 காப்பு |
| ஞான கேணசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயகவாரணமே |
| 1 வைரம் |
| கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் பயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 2 நீலம் |
| மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 3 முத்து |
| முத்தே வரும்முத் தொழிலாற் றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறியநான் தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேரு ததிக் கிணைவாழ்வடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 4 பவளம் |
| அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம்பவளம் பொழி பாரோ தேம் பொழிலாமிது செய்தவள் யாரோ எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள் மந்திர வேத மயப்பொருளானாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 5 மாணிக்கம் |
| காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாப் கலையானவளே பூணக் கிடையாப் பொலிவானவளே புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும்நின் துதியும் நவிலாதவரை நாடா தவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 6 மரகதம் |
| மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதிலயமே இசையே சரணம் அரஹர சிவஎன்றடியவர் குழும அவரருள் பெறஅருளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 7 கோமேதகம் |
| பூமேவியநான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர்கோ கிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 8 பதுமராகம் |
| ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விலாஸ வியாபினி அம்ப சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே |
| 9 வைடூரியம் |
| வலையொத்தவினை கலையொத் தமனம் மருளப் பறையாறொலியொத் தவிதால் நிலையற் றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற் றசைவாற்றனுபூதி பெரும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத் துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
| 10 பலஸ்துதி |
| எவர்எத் தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வாரவரே |